தமிழக அரசின் இலவச விளையாட்டு விடுதியில் பள்ளி மாணவர்கள் சேர்க்கை
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் தமிழக அரசின் இலவச விளையாட்டு விடுதியில் பள்ளி மாணவர்கள் சேர்க்கை! எப்போ பாரு விளையாடிகிட்டே இருக்காங்க. பள்ளிப் பாடங்களை படிக்கவே மாட்டேங்கறாங்க. இதெல்லாம் எப்பத்தான் உருப்படப்போகுதோ? என்று இனி புலம்பாதீர்கள். பத்தாம் வகுப்பைக் கூட தாண்டதவர் சச்சின் தெண்டுல்கர். ஆனால் அவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் அளவிற்கு வளர்ந்தார் எனில் அதற்கு காரணம் விளையாட்டுதான். விஸ்வநாதன் ஆனந்த், பிவி சிந்து போன்றவர்கள் எல்லாம் தங்களின் விளையாட்டுத் திறமையால் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்கள். உங்கள் பிள்ளைக்கு விளையாட்டு துறையில் ஆர்வமா? அவர்களுக்கு பிடித்த விளையாட்டில் முறையாக பயிற்சி கொடுத்தால், அவர்களும் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள். அட போங்க சார்..? படிக்க வைக்கவே முழி பிதுங்குது? இதுல பயிற்சிக்கு நாங்க எங்க போறது? என்று நீங்கள் கேட்பது எங்கள் காதுகளில் விழுகிறது. உங்கள் குழந்தைகளுக்கு விளையாடத் தெரிந்தால் போதும். தமிழ்நாடு அரசே அவர்...