உதவிபெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் தடையா?
உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருந்தால், புது நியமனங்கள் மேற்கொள்ளக்கூடாது. ஆசிரியர், மாணவர்களுக்கு &'பயோமெட்ரிக்&' வருகைப் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஸ்ரீவைகுண்டம் பழையகாயல் ஜஸ்டின் திரவியம், &'அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். அதை அங்கீகரித்து, அதற்குரிய சம்பளம் மற்றும் இதர நிலுவை பணப்பலன்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,&' என மனு செய்தார். தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.இதை எதிர்த்து ஜஸ்டின் திரவியம் மேல்முறையீடு செய்தார்.
ஏற்கனவே விசாரணையின்போது அரசுத் தரப்பில், &'இப்பள்ளி நிர்வாகம் மற்றொரு பள்ளி நடத்துகிறது. அதில் உள்ள உபரி ஆசிரியர்களை இப்பள்ளிக்கு மாற்றலாம். மனுதாரரை புதிதாக நியமித்தது ஏற்புடையதல்ல,&'என தெரிவிக்கப்பட்டது. இதுபோல் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின. நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு நேற்று விசாரித்தது.அரசு வழக்கறிஞர்: இடைநிலைக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வியில் 8333 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் 37 கோடியே 17 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. எங்களின் கவனத்திற்கு வராமலே சில உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் நடக்கிறது.
அங்கீகாரம் மற்றும் சம்பளம் கோரும்போதுதான் அரசின் கவனத்திற்கு வருகிறது என்றார்.நீதிபதிகள்: அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருந்தால், புதிய நியனமங்கள் மேற்கொள்ளக்கூடாது. புதிய நியமனங்கள் செய்தால், அரசு அங்கீகாரம் அளிக்கக்கூடாது. சில வழக்குகள் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு மூலம் நியமனம் மேற்கொள்ளத் தடையில்லை.
இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் கூடுதல் பணியிடமாக இருப்பின் தற்போது பணிவழங்குவதும் கடினம் ஏன் எனில் தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை பார்த்து வரும் வருட கடைசியில் தெரியவாய்பு என சந்தேகத்துடன் தெரிகிறது. ஆனால் ஏற்கனவே superannuatation பிற ஆசிரியர்களுக்கு இல்லை என்ற நிலையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றக்குறை காரணமாக அவர்களுக்கு உண்டு என தெரிவிக்கப்பட்டது.
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்