உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித் துறை முடிவு
- Get link
- X
- Other Apps
Welcome ALL PD PET Association members
உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்
ஏட்டளவில் இல்லாமல் முழுவதுமாக நடைமுறைப்படுத்தினால் வரவேற்கப்பட
வேண்டிய ஒன்று..
நன்று..👌🏻👏🏻👏🏻👏🏻🙏🏻
மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை களை கட்டாயமாக்க பள்ளிகல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 44 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 1.2 கோடி மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறையில் புதியபாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.இதற்கு பரவலாக வரவேற்புகள் அதிகரித்துள்ள நிலையில்,அனைத்து வகையான பள்ளிகளிலும் உடற்கல்விக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது.
இருட்டடிப்பு
உடற்கல்வி பாடவேளைகளில் பிற வகுப்புகளை நடத்துவதால் மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.இதனால் விளையாட்டில் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியாமல் மாணவர்கள் தவிப்பதாக விளையாட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைகளில் பிற பாடங்கள் கற்பிப்பதை தவிர்த்து, மாணவர்கள் கட்டாயம் விளையாடுவதைஉறுதி செய்ய வேண்டும்.வரும் கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறையை அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிகல்வித் துறைஅறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
காலிப் பணியிடங்கள்
இதுதவிர மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பவும், பள்ளிகளுக்கு விளையாட்டு மைதான வசதிகளை ஏற்படுத்தி தரவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேண்டிய ஒன்று..
நன்று..👌🏻👏🏻👏🏻👏🏻🙏🏻
- Get link
- X
- Other Apps