Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உதவித் தொகை: பள்ளி, கல்லூரி வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்க உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தகுதியுடைய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் பயிலும் தகுதியுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம். 1.7.2017 முதல் 30.6.2018 வரையிலான காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். குழு போட்டிகளா இருந...