எப்போது கிடைக்கும் பள்ளி மாணவர்களுக்கு முழுமையான உடற்கல்வி
பள்ளியில் விளையாட்டு செயலர் சார்ந்த கடிதம்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் புதிய மாற்றங்களை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அவர்கள் புதிய கல்வி மாற்றங்களை துவக்கி வைத்தார் இந்த கல்வி மாவட்டங்களுக்கு தலா ஒரு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனைச் சார்ந்த தொடக்க கல்வி அலுவலர்கள் அனைத்து பதவிகளையும் பணி பெயர்களை மாற்றி வழங்கினார் .
பள்ளிக்கல்வித்துறையில் உடற்கல்வி என்ற 2 பாடல்களை உண்டு இந்த பாடவேளை பாடபுத்தகம் வழங்கமல் ஒப்புக்கு நடந்து வருகிறது ஏன் எனில் உடற்பயிற்சி மட்டுமே நடந்து வருகிறது ஆனால் அதை பற்றி அறிவு இல்லை மேலும் மாலை நேர காலைநேர பயிற்சிகளில் இடுபட்ட மாணவர்கள் விளையாட்டு திறனை வெளிப்படுத்த மற்றும் மேம்படுத்தும் பொருட்டு பள்ளிக்கல்வியில் வட்டம், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மற்றும் மாநிலம் ஆகிய நிலைகளில் பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அதக்கு ஏதுவாக மேற்பார்வை மற்றும் பயிற்சி ஆய்வு அதிகாரிகளாக சிலபதவிகள் உருவாக்கப்பட்டது. அந்தப் பதவிகள் பல வருடமாக காலியாகவே உள்ளது.
புதிய கல்வி மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது இந்த பள்ளி கல்வி உடற்கல்வி துறையில் அந்தப் புதிய கல்வி மாவட்டங்களுக்கு ஏதுவாக பழைய கல்வி மாவட்டங்களைப் பிரித்து வட்ட மற்றும் கல்வி மாவட்ட அளவில் புதிய விளையாட்டு வட்டங்களையும் விளையாட்டு மாவட்டங்களையும் அறிவிக்கப்பட வேண்டும் ஆனால் இதுநாள் வரை
அந்த பணி தொடக்க நிலையிலேயே உள்ளது ஏனெனில் சார்ந்த அதிகாரிகள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் முதன்மை உடற்கல்வி ஆய்வர் பணியிடங்கள் காலியாகவே பல வருடங்களாக உள்ளது.
இதனால் அந்தப் புதிய கல்வி மாவட்டங்கள் மற்றும் பல பிரச்சனைகளை பள்ளி மாணவர்களும் மற்றும் அதை சார்ந்த உடற்கல்வித்துறை சார்ந்த உடற்கல்வி ஆசிரியர்களும் புதிய விதிமுறைகளை தெரியாமலும் அதற்கான ஆய்வுகள் மற்றும் பயிற்சிகள் வழங்காமல் நிலுவையில் உள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் சரியானமுறையில் நியமனம் செய்வதும் கானல் நீராகவே கடந்து வருகிறது. இதனால் நோய் இல்லாத வருங்காலம் உருவாக விளையாட்டு தேவை என்ற நிலை அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த உடற்கல்வி துறை அதிகாரிகள் பணியிடங்கள்நீண்ட நாட்களாக காலியாக உள்ள நிலையில் அதற்கு ஒரு உயர் பதவியில் உள்ள இயக்குனர் பொருப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது அரசு .
உயர் அதிகாரி உடற்கல்வி துறை சார்ந்த எந்த விதமான உடற் கல்வித் துறை நுட்பங்களை தெரியாமல் அந்த அதிகாரி பெரும் குழப்ப நிலையில் சில இடங்களில் சந்திக்க வேண்டியுள்ளது. உடற்கல்வி துறைக்கு துறை சாராத ஒருவர் - நுட்பங்களை தெரியாத ஒருவர் அந்த துறையை நிர்வகிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமே ஏன் எனில் துறை நுட்பம் தெரியாத ஒருவர் இந்த துறையை நிருவகிக்க இயலாது மற்றும் கூடாது என எற்கனவே பள்ளிகளில் ஏற்பட்ட பிறச்சனைகளுக்கு அப்போதைய அதிகாரிகள் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
எனவே இந்த புதிய கல்வி மாவட்டங்களுக்கான வட்ட அளவிலான பள்ளிகள் பட்டியல் வெளியிடுவதில் மற்றும் கல்வி மாவட்ட அளவிலான பெயர்பெற்று வெளியிடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு மேலும் மேற்கண்ட கோரிக்கை எதிர்பார்த்து மாணவர்கள் பெற்றோர் கல்வி ஆர்வலர்கள் என்று உடற்கல்வி சங்கத்தலைவர்கள் ஏற்கனவே இந்த கோரிக்கையை வைக்கப்பட்டாலும் மீண்டும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது அதைவிட உடற்கல்வி ஆசிரியாக பணியில் சேந்து 30 வருடம் பதவி உயர்வு இல்லாமல் பணியை முடித்து சென்றுவிட்டார் என வருத்ததுடனும் விரக்தியில் வேதனையை வெளிப்படுத்தினார். சங்க நிருவாகி.
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்