HBA : அரசு ஊழியர் மற்றும் ஆசிர்யர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணம் குறித்த முழுமையான தகவல் மற்றும் விரிவான விளக்கம் JANUARY 18, 2020 வட்டி வீதம்: கடன் தொகையில் முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 % 50,001 முதல் 1,50,000 வரை : 7% 1,50,001 முதல் 5,00,000 வரை: 9% 5,00,000க்கு மேல் : 10% இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி. கடன் வரம்பு: அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். ...