- Get link
- X
- Other Apps
மாநில அரசின் பதிலில் திருப்தி இன்றி, பல்வேறு அரசு நடத்தும் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது மாநில அரசின் பதிலில் திருப்தி இன்றி, பல்வேறு அரசு நடத்தும் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!
முன்னாள் முதல்வர் J.ஜெயலலிதாவின் பதவிக்காலத்தில் ரூ.5 ஆயிரம் ஒருங்கிணைந்த சம்பளத்துடன்,
2011-ஆம் ஆண்டில் சுமார் 16,700 ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தின் (TNTRB) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.
“இந்த ஆசிரியர்கள் 6,7 மற்றும் 8-ஆம் வகுப்புகளை மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்பிக்க நியமிக்கப்பட்டனர்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
2016-ஆம் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, அவர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ.
7,000 ஆகவும், 2017-ல் அவர்களின் ஊதியம் 7,700 ஆகவும் உயர்த்தப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தற்காலிக கற்பித்தல் ஊழியர்கள் தங்களுக்கு PF, ESI, சுகாதார காப்பீடு மற்றும் மகப்பேறு சலுகைகள் போன்ற எந்த நன்மையும் இல்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற சேவைகள் பிற மாநிலங்களால் வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் “தங்கள் கோரிக்கைகளை கோப்புகளாக வைத்து பல ஆண்டுகளாக காத்திருந்த 5,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வி அமைச்சருக்கு பல கோரிக்கைகள் விடுத்தும் சரியான பதில் கிடைக்காத நிலையில் தங்கள் பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்” என்று அனைத்து தமிழ்நாடு தற்காலிக ஆசிரியர் நலன்புரி சங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்
.
இதுதொடர்பாக அவரது சங்கம் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்திற்கு ஒரு பிரதிநிதித்துவத்தை அனுப்பியதாகக் கூறி, “பிற மாநிலங்களில் உள்ள தற்காலிக கற்பித்தல் ஊழியர்கள் மாதத்திற்கு ரூ.10,000-க்கும் அதிகமான தொகையை மற்ற அரசு ஊழியர்களுடன் இணையாகப் பெறுகிறார்கள்” என்று குறிப்பிடுகின்றார்
.
“கடந்த மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தற்காலிக கற்பித்தல் ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக ஆக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், அதன் அடிப்படையில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தற்போது சுமார் 11,700 தற்காலிக கற்பித்தல் ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், அரசாங்கம் உதவி செய்யக் காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய செந்தில்குமார், சட்டசபை கூட்டத்தில் இந்த பிரச்சினையை எழுப்புமாறு முதன்மை எதிர்க்கட்சியான திமுக மற்றும் காங்கிரஸையும் கேட்டுக்கொண்டார்.
மேலும் ராஜினாமா காரணமாக உருவாகியுள்ள 5,000 காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்
Thanks asiarmalar
W
ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்