இ-பாஸ் - சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு - தமிழக அரசு


வாகனங்களை முறைப்படுத்தவே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.

இ-பாஸ் நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது.

அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வெளி மாநில, வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்- தமிழக அரசு.

இ-பாஸ் பெற இணையதள முகவரியை அறிவித்தது நீலகிரி மாவட்ட நிர்வாகம்

இன்று காலை 6 மணி முதல் பதிவு செய்து இ-பாஸை பெற்றுக் கொள்ளலாம் - நீலகிரி ஆட்சியர் அருணா.

கொடைக்கானலுக்கு செல்பவர்களுக்கான இ-பாஸ் பெற இணையதள முகவரி அறிவிப்பு.

அனைத்து வாகனங்களும் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகில் உள்ளசுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் செல்ல 07.05.2024 முதல் 30.06.2024 வரை அனுமதிக்கப்படுவர்

 பாஸ் தொடர்பான துரித நடவடிக்கைக்கு வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்துத் துறைஅலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் இணைய முகவரி மூலம் 06.05.2024 காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி.


Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES