அரசு பள்ளி ஆசிரியர்கள் மாயம் - 2 போலீசார் சஸ்பெண்ட்


கோவை மாநகரம் உக்கடம் ராமர் கோவில் மார்கெட் அருகே கடந்த 3 நாட்களாக கேட்பாரற்று ஒரு கார் நிறுத்தப்பட்டுள்ளது. Tn 46 என்ற பதிவு எண் கொண்ட அந்த கார், அதே இடத்தில் எடுக்கப்படாமல் ஒரே இடத்தில் நின்றிருந்தது. அப்பகுதி மக்கள் அந்த கார் குறித்து விசாரித்துள்ளனர். 



மேலும் காரின் பதிவு எண்ணை கொண்டு காரின் உரிமையாளர் யார் என விசாரித்தனர். விசாரணையில் பார்த்த பொழுது அந்த கார் தீபா என்ற பெயரில் பதிவாகி இருப்பது தெரிய வந்தது.



தீபா பெரம்பலூர் மாவட்டம் என்பதால் இது தொடர்பாக கோவை போலீசார் மூலம் பெரம்பலூர் மாவட்ட போலீசாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட பெரம்பலூர் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தீபா என்ற பள்ளி ஆசிரியர் காருடன் காணாமல் போனதாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் பதிவாகி இருந்தது. 


இதனையடுத்து தீபாவின் கார் கோவையில் இருப்பதை அறிந்த பெரம்பலூர் மாவட்ட போலீசார் அங்கிருந்து கிளம்பி வந்து இன்று இரவு கோவை வந்து காரை பார்வையிட்டனர். காரில் ரத்தம் வடிந்த துணி மற்றும் சிறிய கத்தி உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளது.



கோவை உக்கடம் ராமர்கோவில் மார்கெட் அருகே கேட்பாரற்று 3 நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்த காரை நள்ளிரவில் போலீசார் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கார் பெரம்பலூர் மாவட்டத்தில் காணாமல் போன பள்ளி ஆசிரியை தீபா என்பவருடையது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



அரசு பள்ளி ஆசிரியர்கள் காணாமல் போன வழக்கில் 2 சிறப்பு எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கவனக்குறைவாக பணியாற்றியதாக எஸ்எஸ்ஐ-க்கள் பாண்டியன், முகமது ஜியாவுதீன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் பள்ளி ஆசிரியர்கள் தீபா, வெங்கடேசன் நவ.15ல் பள்ளி வேலைநேரத்துக்குப் பின் மாயமனதாக புகார் அளிக்கப்பட்டது

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES