தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு விடுதி மாணவர்களை அரசு பள்ளி மாணவர்களுடன் மாநில போட்டிகளில் விளையாட அனுமதிக்கக்கூடாது' என, அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழகத்தில் எஸ்.டி.ஏ.டி.யின் கீழ் ஆடவருக்கான 18 விளையாட்டு விடுதி, மகளிருக்கு 11 விடுதி, 2 ஆடவர் எக்ஸலன்சி விடுதி, மகளிருக்கு ஒரு விடுதி என, 32 விடுதிகள் செயல்படுகின்றன.
மதுரை: 'தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு விடுதி மாணவர்களை அரசு பள்ளி மாணவர்களுடன் மாநில போட்டிகளில் விளையாட அனுமதிக்கக்கூடாது' என, அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழகத்தில் எஸ்.டி.ஏ.டி.யின் கீழ் ஆடவருக்கான 18 விளையாட்டு விடுதி, மகளிருக்கு 11 விடுதி, 2 ஆடவர் எக்ஸலன்சி விடுதி, மகளிருக்கு ஒரு விடுதி என, 32 விடுதிகள் செயல்படுகின்றன.
by TaboolaSponsored Links
Invest Today & Secure Your Family's Dream
HDFC Life Insurance
பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் குறிப்பிட்ட விளையாட்டுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டு பிளஸ் 2 வரை விடுதியில் அரசு செலவில் தங்க வைக்கப்படுகின்றனர்.
மாணவர்கள் காலை, மாலை தினமும், 4 மணி நேரம் தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு காலை, மதியம், இரவு மூன்று வேளையும் அட்டவணை படி முட்டை, பயறு, சிக்கன், மட்டன் என சத்தான உணவு வழங்கப்படுகிறது.
பயிற்சியின் போது அணிவதற்கான ஷூ, கிளவுஸ், டி -சர்ட், டிரவுசர் உட்பட இலவசமாக வழங்கப்படுகிறது. விடுதி மாணவர்களின் கவனம் வீட்டு விஷயங்களில் சிதறாமல் விளையாட்டில் மட்டுமே இருப்பதால் திறம்பட பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர்.
இவர்களை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடன் மாநில போட்டியில் மோதவிடுவது நியாயமில்லை என்கின்றனர் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள்.
அவர்கள் கூறியதாவது:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் குறுவட்ட, மாவட்ட, வருவாய் மாவட்ட, மாநில அளவிலான தடகள, குழு விளையாட்டு போட்டிகள்நடத்தப்படுகின்றன. தனிநபர் விளையாட்டுகளான ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல், நீச்சல், குழு விளையாட்டுகளில் கபடி, கால்பந்து என அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் வெற்றிகளை குவிக்கின்றனர்.
எந்தவொரு விளையாட்டுக்கும் பயிற்சியாளர்களுக்கு கட்டணம் செலுத்தி காலை, மாலை தனிப்பயிற்சி பெறுவதில்லை. நாங்கள் கற்றுத் தருவதைக் கொண்டே போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
எல்லா விளையாட்டு நுணுக்கங்களையும் எங்களால் கற்றுத்தர முடியாது. விளையாட்டுக்கான உபகரணங்கள் கூட மாணவர்களிடம் இல்லை. வீட்டில் தரப்படும் எளிய உணவு தான் சாப்பிடுகின்றனர்.
தேவைப்பட்டால் சத்துணவு திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு முட்டை வழங்க முடியும். அவ்வளவு தான் எங்களால் மாணவர்களுக்கு செய்ய முடியும்.
வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில போட்டிகளில் பங்கேற்கும் போது விளையாட்டு விடுதி மாணவர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
விடுதி மாணவர்கள் நேரடியாக மாநில போட்டிகளில் தான் விளையாட வருகின்றனர். இதனால் எளிதாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை வீழ்த்தி விடுகின்றனர்.
தமிழக அளவில் 32 விளையாட்டு விடுதிகள் உள்ளதால் விடுதி மாணவர்களுக்கு இடையே தனியாக மாநில அளவில் போட்டி நடத்த வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மற்ற மாணவர்களுக்கு போட்டி நடத்தினால் தான் மாநில அளவில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஜெயிக்க முடியும்.
அதன் மூலம் கல்லுாரிகளில் இலவச மாணவர் சேர்க்கையும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெறமுடியும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
SOURCE DINAMALR NEWS CLICK TO WATCH DINAMALR
முட்டாள்தனமான கருத்து, போட்டி என்பது வயதி அடிப்படையில் தான் நடைபெறுகிறது. எந்த ஒரு திறமையான உடற்கல்வி ஆசிரியர்களும் குறிப்பாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் இது போன்ற கருத்தை தெரிவித்தது இல்லை, தெரிவிக்க மாட்டார்கள்.. உன்னை போல தற்குறிகள்தான் இது போல கருத்துக்களை பரப்புகிறார்கள் முதலில் உன் மேல் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அரசு முன் வர வேண்டும்... பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இவரை போன்ற போலி நபர்கள் அரசுக்கும் விளையாட்டு துறைக்கும் கழகம் விளைவிக்கும் வண்ணம் செயல்படுகிறார்கள்...
ReplyDeleteஉன் சொந்த கருத்து எல்லாம் ஆசிரியர் கருத்து என்று முட்டாள்தனமாக கூறாதே முட்டாள்...
CHECK THIS LINK BELOW https://m.dinamalar.com/kmalardetail.php?id=60587
Delete