விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்க வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க அரசு முடிவு
தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வரும் நிலையில் மாணவர்களிடம் விளையாட்டுத்துறை மீதான ஆர்வம் அதிகரிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமல்லாமல் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளுக்கு விருதுகளும் வழங்கி பெருமை படுத்தி வருகிறது அரசு.
இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்க வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. வெளிநாட்டு பயிற்சியாளர்கள் டென்னிஸ், தடகளம், நீச்சல் மற்றும் ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு நியமனம் செய்யப்படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு 11 மாதங்கள் வரை பயிற்சி வழங்குவார்கள்.
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்