தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வரும் நிலையில் மாணவர்களிடம் விளையாட்டுத்துறை மீதான ஆர்வம் அதிகரிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளுக்கு விருதுகளும் வழங்கி பெருமை படுத்தி வருகிறது அரசு. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்க வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. வெளிநாட்டு பயிற்சியாளர்கள் டென்னிஸ், தடகளம், நீச்சல் மற்...