கட்டிப்புடிச்சது குத்தமா"..? ஆஸ்திரேலியா வழங்கிய தண்டனை. கோபத்தின் உச்சத்தில் பிசிசிஐ..!!
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu
உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம்
9629803339
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தனிமை படுத்தி உள்ளது.
தற்போது 3-வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றது. இந்த பயிற்சியின்போது இந்திய அணியை சேர்ந்த ஐந்து நபர்கள் தனியாக உணவு அருந்திக் கொண்டிருந்த விடுதியில் ரசிகர்களை கட்டிப் பிடித்து புகைப்படத்திற்கு அனுமதித்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. கொரோனா விதியை மீறிய 5 வீரர்களையும் ஆஸ்திரேலியா தனிமைப் படுத்தி உள்ளது. ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
விதிகளை மீறி இவர்கள் ஹோட்டலில் உணவு உட்கொண்டதாக தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.
தனியார் ஹோட்டல் ஒன்றில் உணவு உட்கொண்ட இவர்கள் அங்குள்ள ரசிகர்களை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தெரிய வந்தது. ஆஸ்திரேலியா வீரரின் பாதுகாப்பிற்கு காரணமாக இவர்கள் தனிமைப்படுத்த வேண்டும். இவர்களை தனியாக பயிற்சி மேற்கொள்ள வைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் போது இப்படி இந்திய வீரர்களை கட்டாயப்படுத்தி ஆஸ்திரேலிய அணி தனிமைப்படுத்தி வைத்துள்ளது இந்திய வீரர்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிசிசிஐ கடும் கோபத்தில் உள்ளது.அதன்படி இந்திய வீரர்கள் தவறு செய்து இருந்தால் அவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஆஸ்திரேலியா நிர்வாகம் எப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நடவடிக்கையை அனுமதிக்காத இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. விதியை மீறியதாக 5 வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாததாக கருதப்படுகிறது.
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்