விடியலை நோக்கி காத்திருக்கும் தமிழக உடற்கல்வி ஆசிரியர்கள்
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339
உடலினை உறுதி செய்யவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடற்பயிற்சி அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாக உள்ளது. இதை அறியாத இளம்தலைமுறையினர் மைதானத்தில் விளையாடாமல் வெட்டி பொழுதுபோக்குக்காக, கைப்பேசியில் காலம் நேரம் தெரியாமல் ஆன்லைன் விளையாட்டு விளையாடி வருகின்றனர். இதனால், சிறு வயதிலேயே எத்தனை பேர் வாழ்க்கையை இழந்து, மன நிம்மதி கெட்டு மரணக்கின்றனர் என்பது அன்றடாட செய்திகளில் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
இதற்கு ஏற்றவாறுதான் நம்முடைய கல்வி முறையும் நம்மை கட்டமைத்துள்ளது அதாவது துணிச்சலோடு வாழவும், மன உறுதியோடு இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது, ஏனென்றால், நாம் விளையாடும் பழக்கத்தை கொஞ்ச கொஞ்சமாக கை கழுவி வருவதால். நாம் மன வலிமை பெறவேண்டும் என்றால், நாம் விளையாட்டை நம்மிடம் வசப்படுத்த வேண்டும், ஏனென்றால், அதுதான் தொடர் முயற்சி, தொடர்ந்து போராடும் குணம் ஆகியவற்றை கொடுக்கும் திறன் உள்ளது. அதுமட்டுமா, சமத்துவம், சகோதரத்துவம், தீண்டாமை ஒழிப்பு ஆகிய அனைத்தையும் ஒருசேர ஒருவருக்கு வழங்க விளையாட்டு என்னும் ஒற்றை தாரக மந்திரத்தால் மட்டுமே வழங்க முடியும்.
இதனாால்தான், உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு பாடப்பிரிவு உருவாக்கி, தகுந்த விளையாட்டு உபகரணங்களுடன் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், பெற்றோர் குழந்தைகளை விளையட அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர், அதுமட்டுமின்றி தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துவருகின்றனர்.
இதுகுறித்து, உடற்கல்வி ஆசிரியர் கூறியதாவது, தமிழக அரசு 2017ம் ஆண்டு உடற்கல்வி சிறப்பாசிரியர் போட்டி தேர்வு நடத்தியது. அப்ேபாது தோ்வு முடிவுகள் வெளியிடுவதில், பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது. அதன்பின், பல சட்ட போராட்டங்களுக்கு பின், முதல்கட்டமாக 551 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் தமிழக பள்ளிகளில் நிரப்பப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும், தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள 1,450க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில் தற்போது 551 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். இருந்தபோதிலும், 2017ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட தகுதி வாய்ந்த தேர்வர்களை மீதம் உள்ள காலிபணியிடங்களில் நிரப்ப வேண்டும் என ஆசிாியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு, கோரிக்கை மனுவாக மாண்புமிகு தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உடற்கல்வி சிறப்பாசிரியர் போட்டி தேர்வில் வெற்றிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட உங்களுக்கு பணிவாய்ப்பு வழங்குவது குறித்து நல்ல தகவல் வெளியிடப்படும் என முதல்வர் அவர்கள் கூறிய தகவல், எங்களிடம் நம்பிக்ைகயை விதைத்துள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில், 40 வயதை கடந்தவர்களை இனி ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்ய இயலாது என அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், விளையாட்டிற்கு வயது ஒரு தடையில்லை எனக்கருதி, தற்போது தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் சான்றிதழ் சரிபாரிப்பிற்கு அழைக்கப்பட்ட தகுதியான பணிநாடுநர்களை கொண்டு நிரப்பினால், அவர்கள் முழு ஊக்கத்துடன், மகிழ்வுடனும் பணியாற்றி பல்வேறு போட்டிகளில் தமிழக வீரர்களை களம்காணச் செய்து வெற்றிபெற்ற பெற வைக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை, விடியல் விடிந்தவுடன்……
💯💯💯
ReplyDelete