புதியதாக பணியில் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் செய்யவேண்டிய பணிகள் என்ன?

Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339

1. பணி ஆணையை பள்ளியில் சமர்ப்பித்து முதல்நாளில் கையொப்பம் இடுதல்

2. பணி ஆணையுடன் மருத்துவரின் உடல் நலம் சார்ந்த அறிக்கை fitness certificate சமர்ப்பித்தல்

3. உங்களுக்கு உண்டான இடத்தை PET ROOM பார்வையிடுதல் மற்றும் கோப்புகளை ( RECORD S) கையொப்பமிட்டு வாங்கிக் கொள்ளுதல்

4. வங்கி கணக்கு எண் இருந்தால் அதன் புத்தகத்தை நகலெடத்து
 பள்ளியின் அலுவலகத்தில் சமர்ப்பித்தல் இல்லாதவர்கள் தலைமை ஆசிரியரின் கடிதம்் பெற்று பக்கத்தில் உள்ள வங்கிகளில் உங்களுடைய அடையாள அட்டைகளைை கொடுத்து கணக்குுு எண்ணை துவக்கம்

5. வருமான வரி கணக்கு எண் அட்டை இருந்தால் சமர்ப்பித்தல் அப்படி இல்லாதவர்கள்புதியதாக விண்ணப்பித்தல். (ஆதார் அட்டையில் தங்களுடைய தொலைபேசி எண் பதிவு செய்யப்பட்டிருந்தால் உடனடி வருமானவரி அட்டை இணையதள வாயிலாக softcopy take

6. உங்களுடைய உண்மை சான்றிதழ்களை பள்ளியில் சமர்ப்பிக்கப்படும் போது தனியாக கடிதம் எழுதி அதற்கு ஒப்புகைச் சீட்டு பெறுதல்

7. CPS கணக்கு எண் பெறுவதற்கு படிவம் S1 பூர்த்தி செய்து அலுவலகத்தில் சமர்ப்பித்தல் அத்துடன் புகைப்படங்கள் தேவையான அளவு சமர்ப்பித்தல்

8.  உங்களுடைய ஆதார் காடுகளில் பிழையோடு இருப்பின் அதனை திருத்தம் செய்து ஒரு நகல்  அலுவலகத்தில் சமர்ப்பித்தல்

9. உங்களுடைய முழு முகவரியை நிலையான மற்றும் தற்காலிக முகவரிகள் அனைத்தையும் அலுவலகத்தில் சமர்ப்பித்தல்

10. Service register புதியதாக கடைகளில் வாங்கி அலுவலகத்தில் சமர்ப்பித்தல்

11. பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களின் உண்மை தன்மை அறிய ஏதுவாக அதன் நகல்கள் மற்றும் அதற்கு உண்டான தொகைக்கான DD வங்கியில் இருந்து எடுத்துக் கொடுத்து கடிதம் மூலம் அனுப்புதல் அலுவகத்தில் சமர்ப்பித்தல்


12. தங்களுக்கு உண்டான கால அட்டவணைகளை தலைமையாசிரியர் sign உடன் பெற்றுக்கொள்ளுதல்
 உங்களுக்கு உரித்தான வகுப்புகளில் கையாளுவதற்கு தகுந்த விளையாட்டுப் பொருட்களையும் தகுந்த வகுப்புகளையும் சார்ந்து அட்டவணை அவசியம்.

13. பள்ளியில் உள்ள விளையாட்டு பொருட்களை பழைய stock register படி ஆய்வு செய்து தலைமையாசிரியரின் கையொப்பத்தை பெற்று
 விடுபட்ட பொருட்களை அதில் கணக்கில் காட்டப்பட்டு அதற்கும் கையெழுத்து பெறுதல் அவசியம்.

14 . பள்ளியின் அடையாள அட்டை போட்டோ ஒட்டி தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று வைத்துக்கொள்ளுதல்

15. IFHRMS salary இணையதளத்தில் அலுலகம் மூலம் தங்கள் பதிவுகளை ஏற்றி சம்பளம் பெற முயற்சித்தல்.


தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

ஏதேனும் விடுபட்டிருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யலாம்







Comments

  1. BPE COURSE PET TEACHER க்கு தகுதியானதா இல்லையா சார்

    ReplyDelete

Post a Comment

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES