வருமானவரி செலுத்துபவர் விபத்தில் இருந்தால் அவருக்கு பத்து மடங்கு மாத ஊதியம் கிடைகுமா உண்மை என்ன?
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu
உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம்
9629803339
வருமான வரி செலுத்துபவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்தால், அவரது கடைசி மூன்று ஆண்டுகளின் சம்பளத்தின் சராசரி தொகையை போல 10 மடங்கு தொகையை அரசு இழப்பீடாக வழங்குகிறது என்று ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் 166 பிரிவின்படி, சாலை விபத்தில் மரணமடைபவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடைமுறை குறித்து மட்டுமே விளக்கம் தரப்பட்டு இருக்கிறது. ஆனால், அதனை சிலர் தவறான தகவலை பதிவு செய்து பரப்பி இருக்கின்றனர்.
1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, சாலை விபத்தை ஏற்படுத்தும் வாகனத்தின் உரிமையாளர், அந்த விபத்தில் மரணமடைபவரின் குடும்பத்தினர் மற்றும் நிரந்தர ஊனம் அடைபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இழப்பீடு எவ்வளவு என்பதை வாகன விபத்து இழப்பீடு குறைதீர் ஆணையம் முடிவு செய்யும் என்று மேற்கண்ட மோட்டார் வாகனச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இதனை சிலர் தவறான தகவலுடன் பதிவிட்டு பரப்புவதுடன், அதனை ஏராளமானோர் பகிர்ந்துகொண்டும் வருகின்றனர்.
இதுபோன்ற தவறான தகவலை பார்த்தால் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளாதீர். மேலும், இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவலை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே பலருக்கு உதவி செய்யாவிட்டாலும், உபகாரம் செய்ததாக அமையும்.
உதாரணத்திற்கு, மரணமடைந்தவர் கடைசியாக வாங்கிய ஆண்டு சம்பளம் 6 லட்ச ரூபாய் எனில், அதற்கு முந்தைய ஆண்டில் 5 லட்ச ரூபாய் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் 4 லட்ச ரூபாய் என கணக்கிட்டு, இதன் சராசரியான ரூ.5 லட்சத்திற்கு இணையான 10 மடங்கு தொகையை இழப்பீடாக பெற முடியும் என்பதே அந்த பதிவில் தெரிவிக்கப்படும் தகவல்.
மேலும், மரணமடைந்தவர் கடைசி மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி செலுத்தியதற்கான அத்தாட்சி குடும்பத்தினரிடம் இருத்தல் அவசியம். 1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம் 166 பிரிவின்படி, இந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Central Government Act
Section 166 in The Motor Vehicles Act, 1988
166. Application for compensation.—
(1) An application for compensation arising out of an accident of the nature specified in sub-section (1) of section 165 may be made—
(a) by the person who has sustained the injury; or
(b) by the owner of the property; or
(c) where death has resulted from the accident, by all or any of the legal representatives of the deceased;
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்