சிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu
உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம்
9629803339
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''அரசால் அமைக்கப்பட்ட குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.
நீட் நுழைவுத் தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீதக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதுபோல எத்தனை போட்டித் தேர்வுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் பாடத்திட்டத்தை உருவாக்குவோம்.
மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க, கல்வித் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் ஒதுக்கப்படும். கரோனா முடிவுக்கு வந்த பிறகு விளையாட்டுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
அதேபோலச் சிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்