கேள்விக்குறி! 26 ஏக்கரில் விளையாட்டு அரங்குகள் இருந்தாலும் ... அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை

Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339



மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 26 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு அரங்குகள் இருந்தாலும் தண்ணீர் இல்லாததால் கழிப்பிட வசதியும் சுகாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது. கழிப்பிட தேவைக்காக வீரர்கள் வெளியே செல்ல வேண்டியுள்ளது. இங்கு இன்டோர் ஸ்டேடியங்கள், கபடி, பாக்சிங், பாட்மின்டன் அரங்குகளும் குழு விளையாட்டு போட்டி நடத்தும் அரங்குகளும் உள்ளன. தடகள டிராக்கில் மட்டும் தினமும் 200க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறுகின்றனர். அவ்வப்போது மாநில, தேசிய விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. மைதானத்தில் போதுமான தண்ணீர் இல்லாததால் கழிப்பறைகள் சுகாதாரமின்றி உள்ளன.ஆறு முறைக்கு மேல் பல்வேறு இடங்களில் போர்வெல் அமைத்தும் தண்ணீரின்றி வறண்டு விட்டன.

தற்போது விளையாட்டு விடுதி போர்வெல் மட்டுமே தண்ணீர் தருகிறது. மாநகராட்சி லாரி தண்ணீரை நம்பியே மைதானம் செயல்படுகிறது. போட்டிகள் நடக்கும் போது சில நேரங்களில் போட்டி நடத்துபவர்களே தண்ணீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. இதனால் வீரர், வீராங்கனைகள் கழிப்பறைகளை பயன்படுத்த தயங்குகின்றனர்.

தேசிய போட்டிகள் நடத்தும் போது வெளிமாநில வீரர், வீராங்கனைகள் முகம் சுளிக்கின்றனர். தண்ணீர் வசதியின்றி கழிப்பிட வசதிக்காக வெளியே செல்ல வேண்டியுள்ளது.26 ஏக்கர் பரப்பளவில் பெயருக்கு மட்டுமே மழைநீர் வசதி உள்ளது. மழைநீரை முறையாக சேகரித்து பூமிக்குள் விட ஏற்பாடு செய்ய வேண்டும். மாநகராட்சி குடிநீர், ஆழ்குழாய் நீர் பைப் லைன்கள் மைதானத்தின் வாசல் வழியே செல்கிறது. ஆனால் மைதானத்திற்குள் இணைப்பு கொடுக்கவில்லை. இந்த இரண்டு திட்டங்களும் முறையாக நடந்தால் கழிப்பறைகளில் நிரந்தரமாக தண்ணீர் வசதியை ஏற்படுத்த முடியும்.

 


Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES