எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள்
s
state bank of india state bank account : வங்கி சேவையில் மிகச் சிறந்த சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கும் எஸ்பிஐ வங்கியின் டாப் சலுகைகள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
1. சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்துக்கு 3 மூறை மட்டும் கட்டணம் இல்லாமல் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் ஒரு டெபாசிட்டுக்கு 50 ரூபாய் (ஜி
எஸ்டி தனி) கட்டணம் செலுத்த வேண்டும். கணக்கு தொடங்கிய வங்கிக் கிளையைத் தவிர வேறு கிளைகளில், ஒரு நாளில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை மட்டும் டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் டெபாசிட் தொகையை ஏற்பது பற்றி அந்த கிளையின் மேலாளர் முடிவு செய்வார்.எஸ்பிஐ சேமிப்புக் கணக்கில் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி குறைந்தபட்சம் 5000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகக் குறைகிறது. இந்த மினிமம் பேலன்ஸ் அளவு 50 சதவீதம் (ரூ.1,500) வரை குறைந்தால் 10 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) அபராதமாகக் கழிக்கப்படும். 75 சதவீதம் வரை குறைந்தால் 15 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) அபராதம் வசூலிக்கப்படும்.
3. இந்த அபராதத் தொகை தற்போது 30 ரூபாய் 50 ரூபாய் வரை (ஜிஎஸ்டி தனி) இருக்கிறது. குறைந்தபட்ச இருப்புத் தொகை சிறிய நகரங்களில் 2,000 ரூபாயாகவும் கிராமங்களில் 1000 ரூபாயாகவும் இருக்கும்.
4. 25,000 ரூபாய் வரை மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்ட சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் மாதம் 5 முறை (பண எடுப்பது மட்டுமின்றி இதர பயன்பாடுகளும் சேர்த்து) கட்டணம் இல்லாமல் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். 25 ஆயிரத்துக்கு மேல் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்டிருந்தால் எந்த கட்டுப்பாடும் இல்லை.
5. போதிய இருப்புத் தொகை இல்லாமல் ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தாலும் 20 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) கட்டணம் உண்டு. சாதாரண டெபிட் கார்டை இலவசமாகவே வழங்குகிறது. ஆனால், கோல்டு டெபிட் கார்டு பெற 100 ரூபாயும் (ஜிஎஸ்டி தனி) பிளாட்டினம் டெபிட் கார்டு வாங்க 300 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) வழங்க வேண்டும்.
உங்களுக்கு இந்த வருடம் ITR RETURNS செய்ய வேண்டுமா CLICK BELOW
RS. 200 TO 300
இ-பைலிங் செய்ய 9629803339
ஆசிரியர் வருமான வரி இணையதளம்
ஏடிஎம்ல பணம் இல்லனா எதுக்கு ஜிஎஸ்டி தனியா போடு ஒரு அடி விழும் பணம் இருக்காது இதுல வேற எஸ்பிஐ பெரிய நெட்வொர்க் மக்களை ஏன் இப்படி கொள்ளை அடிக்கிறீர்கள் இதுக்கு வேற ஏதாவது தொழில் பாத்துட்டு போகலாம் உங்க ஏடிஎம்ல பணம் இல்லனா அதுக்கு என்ன செய்யலாம் அதற்கு ஜிஎஸ்டி அக்கவுண்ட்ல எவ்வளவு வரும் எல்லாமே சொல்லுங்க அப்படி கொண்ட சிஸ்டம் கொண்டுவ சும்மா ஏதாச்சும் மக்கள் ஏமாற்றமா வேலையை பாருங்க
ReplyDelete