- Get link
- X
- Other Apps
கொரோனா வைரஸ் தாக்கிய நபர் குணமான பின்பும் கூட அவர் சில நாட்களுக்கு தனியாக இருக்க வேண்டும், என்று மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர்.
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்கிய நபர் குணமான பின்பும் கூட அவர் சில நாட்களுக்கு தனியாக இருக்க வேண்டும், என்று மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர். இதற்கான காரணங்களை சீனா ஆராய்ச்சியாளர்கள் அடுக்கி இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க அசுர வேகத்தில் பரவி வருகிறது. உலகம் முழுக்க 18,957 பேரை கொரோனா வைரஸ் காவு வாங்கி உள்ளது. 425,959 இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 109,241 பேர் இதுவரை குணப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் இன்னும் வீட்டில்தான் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
எப்படி குணப்படுத்தப்பட்டுள்ளனர்
கொரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாவில்லை. ஆனால் மருந்து கண்டுபிடிக்கப்படாமல் 1 லட்சம் பேர் எப்படி குணப்படுத்தப்பட்டது எப்படி என்று உங்களுக்கு கேள்விகள் எழலாம். இவர்கள் எல்லோரும் முழுமையாக குணப்படுத்தப்படவில்லை. கொரோனா மூலம் ஏற்படும் பின் விளைவுகளான இருமல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி ஆகியவற்றை கட்டுப்படுத்தி, கொரோனாவை செயல் இழக்க வைத்து இருக்கிறார்கள். முழுமையாக கொரோனாவை குணப்படுத்தவில்லை.
கொரோனா பரவுமா
கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதா
இதனால் கொரோனா வைரஸ் தாக்கிய நபர் குணமான பின்பும் அவர் மூலம் வைரஸ் பரவுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதாவது ஒரு நபர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனை செல்கிறார். அவர் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு, உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்று வீட்டிற்கு அனுப்புகிறார்கள். இப்போது இந்த நபர் மூலம் மற்றவர்ளுக்கு கொரோனா பரவுமா என்று கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.
வாய்ப்பு
வாய்ப்பு உள்ளது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கிய நபர் குணமடைந்த பின்பும் கூட அவர் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது என்று சீனாவை சேர்ந்த மெட்ஆர்சிவ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கான காரணங்களை சீனா ஆராய்ச்சியாளர்கள் அடுக்கி இருக்கிறார்கள். பொதுவாக ஒருவருக்கு கொரோனா வந்து குணமானால் மீண்டும் அவருக்கு கொரோனா வர வாய்ப்புகள் குறைவு.
வாய்ப்புகள் குறைவு
கொரோனா வாய்ப்புகள் குறைவு
ஆனால் அவர்களின் மூச்சு குழலில் சிகிச்சைக்கு பின்பும் கூட கொரோனா வைரஸ் இருக்க வாய்ப்புள்ளது. சிறிய சிறிய வளராத வைரஸ்கள் இருக்க வாய்ப்புள்ளது. இது தும்மலின் போதும், இருமலின் போதும், எச்சில் துப்பும் போதும் பரவ வாய்ப்புள்ளது. முக்கியமாக எச்சில் வழியாக இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இதனால்தான் வாயை தொட கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள் .
ஜாக்கிரதை
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
கொரோனா வைரஸ் மூலம் குணமடைந்தவர்கள் மூலம் எத்தனை பேருக்கு வைரஸ் பரவி உள்ளது என்று புள்ளி விவரம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்த வைரஸ் குணமடைந்த பின்பும் கூட மனிதர்கள் உடலில் இருக்க வாய்ப்புள்ளது. இவர்கள் மூலம் வைரஸ் பரவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் சில நாட்கள் இவர்களை கண்காணிப்பில் வைப்பது நல்லது. இவர்களை முதியவர்கள் அருகே நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எத்தனை
எத்தனை நாட்கள்
இதனால் நோயாளிகள் குணமடைந்த பின்பும் கூட குறைந்தது 21 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த வைரஸ் தொடர்ந்து உடலில் இருக்கிறதா என்பது 21 நாட்களில் தெரிந்து விடும். மீண்டும் அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். இதனால் இந்த 21 நாள் தனிமை மிக அவசியம். குணமான பின்பும் கூட அவர்கள் சில நாட்களுக்கு தனியாக இருக்க வேண்டும், என்று மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர்.
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்