கொரோனாவால் தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்திவைப்பு: பள்ளிக்கல்வித்துறை

Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339


சென்னை: கொரோனாவால் தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில்


கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதை தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனாலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது என்று ஐகோர்ட்டு மறுத்தது. 

இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள  அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. (பிரி கே.ஜி. உள்பட) வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் எல்.கே.ஜி. (பிரி கே.ஜி. உள்பட) முதல் 5–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வருகிற 16–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை விடுமுறை அளிக்க அரசால் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என நேற்று தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு பற்றி பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என பள்ளி கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  மேலும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் எல்.கே.ஜி. (பிரி கே.ஜி. உள்பட) முதல் 5–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த உத்தரவும் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி வரும் 16ந்தேதி அறிவிப்பு வெளியாகும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்து உள்ளார்.
.

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES