விளையாட்டு சங்கங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!
Welcome ALL PD PET members Tamilnadu
உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்
விளையாட்டு பிரிவில் தவறான வழியில் திறமையில்லாத மாணவர்களை சேர்த்தால் சங்கங்கள் கலைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா நூலத்தில் விளையாட்டு சங்கங்களின் தலைவர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதி, சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " உயர்கல்வியில் விளையாட்டு பிரிவில் திறமையில்லாத மாணவர்கள் சேர சங்கங்கள் தவறான வழியில் செயல்படுவது அதிகரித்து வருவதாகவும், அவ்வாறு தொடர்ந்து செயல்பட்டால் சங்கங்கள் கலைக்க சட்டம் உருவாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், மாணவர்கள் மத ரீதியாக குழு அமைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிடவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக எந்த சுற்றிக்கை வெளியிடப்பட்டாலும் முதல்வர் ஒப்புதல் பெற்றுதான் அனுப்படும் எனவும் குறிப்பிட்டார்.
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்