விளையாட்டு விழாவில் மாணவன் பலியானது தொடர்பாக அரசு கடம் நடவடிக்கை எடுக்கும் என குழந்தைகள் நலக் குழு மாவட்டத் தலைவர் கூறினார்.
சென்னை: விளையாட்டு விழாவில் மாணவன் பலியானது தொடர்பாக அரசு கடம் நடவடிக்கை எடுக்கும் என குழந்தைகள் நலக் குழு மாவட்டத் தலைவர் கூறினார். செங்கல்பட்டு கலைவாணர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் விக்னேஷ் (16). செங்கல்பட்டு வேதாச்சலம் நகரில் உள்ள ராமகிருஷ்ணா மேல் நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். ராமகிருஷ்ணா பள்ளி குழுமத்தில் ஆண்கள், பெண்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளி விளையாட்டு விழாவில் நடந்த ஒலிம்பிக் தீப்பந்த நிகழ்ச்சியில் விக்னேஷ், பொட்ரோல் நிரப்பி தீ வைக்கப்பட்ட ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஏந்தி ஓடினார். அப்போது தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு மருத்துவமனையிலும் பின்பு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த அவர், 7 நாட்களுக்கு பின்பு இறந்தார். இதுதொடர்பாக மாணவனின் தந்தை முருகன், செங்கல்பட்டு டவுன் போலிசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், பள்ளி நிர்வாகத்திடம் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்