PET JUDGEMENT 20.8.2019

Welcome ALL PD PET Association members




C.PED, B.P.E, H.PED, D.PED ELIGIBLE FOR SPECIAL TEACHERS PHYSICAL EDUCATION POST.. COURT ORDER.. THOUGHS WHO ARE CLAMING

Click to download


🏀⚽🎾🏓⚾🏈🥊
*உடற்கல்வி சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு படித்தவர்கள் உடற்கல்வி சிறப்பாசிரியர்களாக தகுதியானவர்களாகக் கருதி, ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டவர்களுடன் இணைந்து இவர்களுக்கும் பணி வழங்க பரிசீலிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.*
🏀⚽🎾🏓⚾🏈🥊
*தமிழகத்தில் உள்ள சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 2017-இல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து 2017 செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 632 பேரின் பெயர் பட்டியல் வெளியானது.*
🏀⚽🎾🏓⚾🏈🥊
*இந்த தேர்வில் பலருக்கு கல்வித்தகுதி இல்லை எனக் கூறி நிராகரிக்கப்பட்டனர்.*
🏀⚽🎾🏓⚾🏈🥊
 *இதனை எதிர்த்து, திருநெல்வேலியைச் சேர்ந்த மலர்விழி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.*
🏀⚽🎾🏓⚾🏈🥊
*இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிடப்பட்டிருந்தது.*
🏀⚽🎾🏓⚾🏈🥊
*இதனை எதிர்த்து திருவள்ளூரைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.*
🏀⚽🎾🏓⚾🏈🥊
*இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:*
🏀⚽🎾🏓⚾🏈🥊
*உடற்கல்வி சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு படித்தவர்களையும் தகுதியானவர்களாக கருதி, ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டவர்களுடன் இணைந்து இவர்களுக்கும் பணி வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்.*
🏀⚽🎾🏓⚾🏈🥊
*இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.*
🏀⚽🎾🏓⚾🏈🥊

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES