பள்ளி விளையாட்டு போட்டிகள் சாந்த கருத்து
Welcome ALL PD PET Association members
உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்
*மாநிலத் தலைவருக்கும், இன்றைய விவாத மேடையின் தலைவருக்கும் வணக்கம்!*
🙏🏾
*அரசு அளிக்கும் நிதியில் விளையாட்டுப் போட்டிகளை சர்வதேச தரத்திற்கு நடத்த வேண்டுமா? கடமை(கணக்கு)க்கு நடத்த வேண்டுமா?*
*தலைப்பு மிகவும் அருமை. நேற்று வரை நம்முடன் ஆடுகளத்தில் பணியாற்றியவர் பொறுப்பு வந்தவுடன் அதிகாரமும், ஆணவமும் மிக்க அதிகாரியாகி விடுகிறார். நேரத்திற்கு பள்ளிக்கு போக வேண்டியதில்லை. மாணவர்களின் ஒழுங்கு-கட்டுப்பாடு பார்க்கத் தேவையில்லை. இறை வணக்க கூட்டம், இடைவேளை எதுவும் பார்க்க வேண்டியதில்லை. இதற்கு தனி ஊதியம் வேறு.(கீழே கிடந்து கண்டெடுத்த காசு மாதிரி அது. அது அவரது வைத்தே தன் நிலையை 'கப்பம் கட்டி தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.*
*சரி. ஒழிஞ்சி போகட்டும். போட்டிகளை ஒழுங்காக நடத்துகிறாரா? என்றால் அது தான் மிகப் பெரிய கேள்விக்குறி(❓).*
*பொறுப்புக்கு வந்தவுடன் மாவட்டத்தில் தனக்கு செல்வாக்கு தேடும் வகையில் நம் ணகோதரர்களைக் கொண்டு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொள்வார். அதில் உள்ளவர்கள் பள்ளிக்கு செல்லாமல் முடிந்தவரை களப்பணியிலேயே இருப்பார்கள். பொறுப்பு நல்லவர், வல்லவர் என்று புகழ் பாடி, OD வாங்கிக் கொள்வர்.*
*மன்னிக்கவும். விவாதம் தடம் மாறுகிறது. இந்த பொறுப்புகள் செய்யும் அநியாயங்கள் எண்ணிலடங்கா.*
*அரசு அளிக்கும் நிதியை விளையாட்டுப் போட்டியின் தரத்தை மேம்படுத்துகிறதா? பொறுப்புகளின் வங்கி இருப்பை உயர்த்த உதவுகிறதா? என்று தலைப்பு வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும்.*
*போட்டிகள் முறையாக நடத்தப் படுகிறதா? விதிப்படி நடத்தப்படுகிறதா? இல்லை. இல்லை. இல்லவே இல்லை.*
*குறு வட்ட அளவில் ஓடும் போட்டிகளில் நாம் மாணவனுக்கு warm up, warm down, recovery time என்று எதையுமே கொடுப்பதில்லை. ஏனென்றால் ஒரே நாளில் தடகளத்தை முடித்தாக வேண்டும். மாணவர்களுக்கு இரண்டு நாள் உணவுப்படி அளித்து உரிய கால அவகாசத்தை வழங்கி போட்டிகள் நடத்தப்பட வேண்டும். நேற்று வரைக்கும் அந்த நிலத்தில் மணிலா பயிர் இருக்கும். கலர் கொடியை நட்டு Running track ஆக மாற்றி விடுவார்கள். இந்த Beach Volleyball விளையாட்டை கட்டாந்தரையில் நடத்தும் வித்தை இவருக்கு மட்டுமே தெரியும். Technical Committee என்று ஒன்று இருப்பதையே இவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.*
*எனக்கு தெரிந்து ஒரு அணி ஒரே நாளில் கூடைப்பந்து போட்டியில் ஐந்து ரவுண்டும், ஒரு அணி கால்பந்து போட்டியில் மூன்று ரவுண்டும் விளையாடிய கொடுமை எல்லாம் நடந்தேறியது.Light failure ஆல் நான்காவது ரவுண்ட் தடைபட்டது.*
*இருட்டில் ஒரே சத்தமாக இருக்கும். என்னவென்று பார்த்தால் அங்கே கபாடி போட்டி நடந்து கொண்டிருக்கும். எதிரணி வீரரை தொட்டானா என்பது சத்தியமாகத் தெரியாது. அவன் லாபியை பயன்படுத்தியதால் raiderக்கு புள்ளி வழங்கிய கூத்துகளும் நடக்கும்.*
*குறைந்த பட்சம் மாநில அளவு போட்டியிலாவது league-cum-knock out முறை நடத்தப்பட வேண்டும்.*
*சர்வதேச தரம் பற்றி பேசும் போது குறுவட்ட அளவிலிருந்தே வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட வேண்டும்.*
*ஒவ்வொரு பள்ளியிலும் தரமான ஆடுகளம் அமைக்கப்பட வேண்டும்.*
*மாணவர்களுக்கும், அணி மேலாளருக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து தினப்படி, பயணப்படி வழங்க வேண்டும்.*
*முக்கியமாக நடுவர்களுக்கு தினப்படி, பயணப்படி மட்டுமல்லாமல் உழைப்பூதியம் வழங்கப்பட வேண்டும். உழைப்பூதியம் இல்லாமலே உழைப்பவர்கள் நாம்*
*இவை எல்லாவற்றிற்கும் நிதி ஒதுக்க ரூ. 10/- போதாது. கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஏனென்றால் பள்ளியில் விளையாட்டின் நாற்றங்கால் இருக்கிறது என்பதை அரசும், ஆட்சியாளர்களும் உணர வேண்டும்.*
*நன்றி!*
பி. வெங்கடேசன்
கடலூர்.

Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்