தமிழகத்தில் உள்ள உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் 9500 உடற்கல்வி பணியிடங்கள்

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்


வணக்கம்:பொது நல தகவல் மற்றும் பத்திரிக்கை whatsapp செய்தி: பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் மேல்முறையீடு விண்ணப்பம்: நோட்டிபிகேஷன்: தமிழகத்தில் உள்ள உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் 9500 உடற்கல்வி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டன. பின்பு 1996இல் அரசாணை 525 வெளியிடப்பட்டு 250 க்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் 550க்கு 2 உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் 850க்கும் அதற்கு மேலும் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிகபட்சமாக 3 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதனால் 3000க்கு மேல் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக பள்ளிக்கல்வி திரும்பப்பெறப்பட்டது. ஆனால் மற்ற ஆசிரியர்களுக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமனம் செய்யப்படுகிறார்கள். அடுத்து 2012 வரையில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வந்தார்கள். அதன் பின்பு 2013 -2014 ,2014- 2015 ஆண்டு அரசா ணை 177 மற்றும் 178 வெளியிடப்பட்ட 600 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நோட்டிபிகேஷன். அதன்படி வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.ஆனால் இதுவரையில் பணியிடங்களை நிரப்ப படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேம். அரசாணை பெறப்பட்டுள்ளதால் வழக்கு போடப்பட்டு நிலுவையில் உடற்கல்வி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவு மூப்பில் 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது .அவர்கள் அனைவரும் 45 வயதைக் கடந்து விட்ட னர். இந்நிலையில் பகுதி நேர உடற்பயிற்சி ஆசிரியர்களை 2014 2015 இல்  ஒருதலைப்பட்சமாக பள்ளிகளுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் வேலைக்கு வந்தால் போதும் என்ற சூழ்நிலையை உருவாக்கி காத்திருப்போர் (வேலைவாய்ப்பு பதிவுமூப்பு) பட்டியலில் உள்ளவர்களை விட்டுவிட்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் முறைப்படி இவர்களை நியமிக்கவில்லை!! இவர்களுக்கு பணி நிரந்தரம், சம்பள உயர்வு,உத்தரவு நிலையை கொடுக்கக் கூடாது.இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும்,பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெருமக்களும்,பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகளும், உயர்நீதிமன்ற நீதிபதி அவர்களும், ரிசர்வ்டு & ரிசர்வேஷன் படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பு படி, அரசு பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் பணி நியமனம் நியமிக்க அவர்கள் பதிவு மூப்பின் படி வேலை கிடைக்க உடனடியாக அரசாணை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் .உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பு  படி அரசு பள்ளிகளில் அரசு பணி நியமனம் நியமிக்க அவர்கள் பதிவு மூப்பின் படி வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஒரு விளையாட்டில் மூச்சைப்பிடித்து காலையிலயும் மாலைகளையும் பயிற்சி பெற்று ஒரு விளையாட்டில் சிறப்பு பெற்றவர்களுக்கு செலிப்ரேஷன் னாக கிராமப்புற நகர்ப்புற உடற்கல்வி ஆசிரியர்களுக்கு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிட நேரடி நியமனம் கொடுக்கப்பட்டது. இப்பொழுது இவர்களின் குடும்பம் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்தில் மனைவி மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது? பலபேர் இறந்துவிட்டார்கள் !!  பல பேர் மன உளைச்சலால் இறந்து போகக் கூடிய சூழ்நிலையில் உள்ளார்கள் !!  இவர்கள் ஒருதரம் பிறந்து விட்டார்கள் இவர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டியது தமிழக தலைவர்களின் (மனித நேய தனம்) தலையாய பொறுப்பு. தமிழக அரசு உடனடியாக அரசாணையை ரத்து செய்து,வேலை வாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து புதுப்பித்து காத்திருக்கும் கிராமப்புற தொழிற் கல்வி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உண்மையான நீதிமன்றம், வேலைவாய்ப்பு அலுவலகம் தான். அடுத்து, அனைத்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் உள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் நேரடி நியமனம் வழங்கப்பட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். படிக்கும் குழந்தைகளுக்கு நோயில்லாமல் இருக்க  சிறுவயது முதல் உடற்பயிற்சியை கற்றுக்கொடுக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நேரடி நியமனம் செய்ய வேண்டும். இப்படிக்கு பாதிக்கப்பட்டவர்கள். உடற்பயிற்சி தொழிற் கல்வி படித்தவர்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கும்  உயர்கல்வி அரசு சார்பு செயலாளர்களுக்கும் அரசு துணை செயலாளர்க்கும் கிடைக்கும் வரை படித்தவர்கள் கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மருத்துவர்கள் அனைவரும் இதை ஷேர் செய்யும்படி பணிவாய் வேண்டுகிறோம்.

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES