Skip to main content

வருங்கால வைப்பு நிதி பணத்தை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்


பணி ஓய்வுக்குப் பின் உதவும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள தொகையை எடுத்துக்கொள்ள (withdraw) அனுமதிக்கிறது.
தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் இ.பி.எப். (EPF) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (Employee Provident fund) வழங்கும். பொதுவாக இது மாதம் தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது பி.எப். கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்த தொகையை தொழிலாளர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து எடுத்துக்கொள்ளலாம்.

epfindia.gov.in என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பம் தொழிலாளர் பணிபுரிந்த நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

அந்நிறுவனத்திடம் ஒப்புதல் கிடைத்த பின்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள பணம் வங்கிக் கணக்கில் 10 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்படும்.



தேவையானவை:


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பெற விண்ணப்பிப்பதற்கு யு.ஏ.என் (UAN) அல்லது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (Universal Account Number) எனப்படும் பொதுக் கணக்கு எண்ணும் அதனை ஆக்டிவேட் செய்ய பயன்படுத்திய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். அத்துடன் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண், பான் எண் போன்றவையும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?


1. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் epfindia.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று யு.ஏ.என் மற்றும் பாஸ்வேட் மூலம் கணக்கிற்குள் உள்நுழையவும்.


2. பின், 'Online Services' என்பதில் உள்ள 'Claim' என்பதைக் கிளிக் செய்யவும்.


3. இப்போது தோன்றும் பக்கத்தில் வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டும் டைப் செய்து 'Proceed For Online Claim' என்பதை கிளிக் செய்யவும்.




4. புதிதாகத் திறக்கும் தனி பக்கத்தில் பணத்தை எடுப்பதற்கான காரணம், எவ்வளவு பணம் தேவை என்பன உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட் வேண்டும். முழு பணத்தையும் எடுக்க வேண்டுமா? பாதி தொகையை எடுக்க வேண்டுமா? பென்ஷனை மட்டும் எடுக்க வேண்டுமா எனக் தேர்வு செய்ய வேண்டும்.


5. அடுத்து, 'Get Aadhaar OTP' என்பதை கிளிக் செய்தால் ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ரகசிய குறியீட்டு எண் (One Time Password) எஸ்.எம்.எஸ். மூலம் கிடைக்கும். அதனை உரிய இடத்தில் டைப் செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.


விண்ணப்பித்த பின் அதன் நிலையை 'Online Services' என்பதில் உள்ள 'Claim status' என்பதைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES