மல்லர் கம்பம், சிலம்பம் பயிற்சியில் சிறார்கள் ஆர்வம்!
Welcome ALL PD PET Association members
உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்
மல்லர் கம்பம், சிலம்பம் பயிற்சியில் சிறார்கள் ஆர்வம்!
கோடை விடுமுறையையொட்டி, விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மல்லர் கம்பம், சிலம்பம் போன்ற தமிழக பாரம்பரிய விளையாட்டுப் பயிற்சிகளில் ஏராளமான சிறார்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற விளையாட்டு ஆசிரியர் உலக.துரை தலைமையிலான குழுவினர், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மல்லர் கம்பம் தொடர்பான விளையாட்டுகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்சி பெற்ற பல்வேறு மாவட்ட வீரர்கள் தேசிய மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று வருகின்றனர். இந்த வகையில், விழுப்புரம் மாவட்ட மல்லர் கம்பம் கழகம் சார்பில், 37-ஆம் ஆண்டு கோடை கால பயிற்சி முகாம் விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கடந்த மே 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மல்லர் கம்பம், சிலம்பம் பயிற்சியில் சிறார்கள் ஆர்வம்!
உண்டு உறைவிடப் பயிற்சியாக, சிறார்கள், இளைஞர்கள் ஒரு மாத காலம் இங்கு தங்கி மல்லர் கம்ப சாகசம், கயிறு மல்லர் கம்பம், ஏரியல் சில்க் என்ற துணியில் தொங்கும் சாகசம், யோகா, ஜிம்னாஸ்டிக், சிலம்பம், மல் யுத்தம் போன்ற பயிற்சிகளை ஆர்வமுடன் கற்று வருகின்றனர். ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன், ஆதித்யன், பாபு, மணிபாரதி, விக்கி ஆகியோர் இந்தப் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் கூறுகையில், இந்த பாரம்பரிய விளையாட்டுப் பயிற்சிகளில் மூன்றரை வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.
மல்லர் கம்பம், சிலம்பம் பயிற்சியில் சிறார்கள் ஆர்வம்!
குறிப்பாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 80 பேர் இப்பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். காலை 6 முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இடையே, பாரம்பரிய விளையாட்டுகள் குறித்தும், முதலுதவி போன்ற விழிப்புணர்வு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கோடை பயிற்சியுடன் தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மல்லர் கம்பம், சிலம்பம் போன்ற விளையாட்டுகள் உடலை கட்டமைப்புடன், ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வதற்கு உதவுகிறது. மேலும், உடல் தசைநார்களை வலிமைப்படுத்துவதுடன், மனதையும் ஒருநிலைப்படுத்துகிறது. மனவலிமையும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்பதால், மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டிலும் சாதிக்க முடியும். இதனால், பெற்றோர்கள் ஆர்வத்துடன் முன் வந்து, தங்கள் பிள்ளைகளை இந்தப் பயிற்சிகளில் சேர்க்கின்றனர் என்றார்.
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்