விளையாட்டுப் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு _ முதன்மைக்கல்வி

Welcome ALL PD PET Association members


விளையாட்டுப் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்த ஸ்ரீகுலபதி பாலையா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டு.





புதுக்கோட்டை,ஜன.20: இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற  புதுக்கோட்டை ஸ்ரீகுலபதி பாலையா மேல்நிலைப் பள்ளி  மாணவர்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டினார்.

டெல்லியில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை  ஸ்ரீ குலபதி பாலையா  மேல்நிலைப்பள்ளியில்  9 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவி மோனிகா கலந்து கொண்டு தங்கப்பதக்கம் மற்றும் தமிழக அரசு வழங்கும் ரூ 2 இலட்சம் ரொக்கப் பரிசு பெற்றார்.அதே பள்ளியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் கார்த்திகேயன் வெண்கலப்பதக்கம் மற்றும் தமிழக அரசு வழங்கும் ரூ1 இலட்சம் ரொக்கப் பரிசு பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
இவ்வாறு தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த ஸ்ரீகுலபதி பாலையாமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மோனிகா,கார்த்திகேயன் ஆகியோரை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா நேரில் அழைத்து பாராட்டினார்..
நிகழ்வின் போது இலுப்பூர் கல்வி மாவட்ட மாவட்டக்கல்வி அலுவலர் க.குணசேகரன்,அறந்தாங்கி கல்வி மாவட்ட  மாவட்டக்கல்வி அலுவலர் ( பொறுப்பு) கு.திராவிடச் செல்வம்,புதுக்கோட்டை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆர்.தங்கராஜ் ,இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி மற்றும் பள்ளிதலைமைஆசிரியர்கள்,உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர்  உடன் இருந்தனர்




 உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்

Comments

Popular posts from this blog

SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT 2026-2027 (GIRLS 17 ATHLETIC ENTRY FORM VERIFY BEFORE FILLING)

புதிதாக ‘உடற்கல்வி பிரிவு’

பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு துறை நடத்தும் விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவர்கள் எந்த விளையாட்டுகள் இணைந்து விளையாடலாம்*