RTI தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை. என தமிழக அரசு RTI இல் பதில்

🅰🅻🅻 🆃🅽 🅿🅳 🅿🅴🆃

RTI தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை. என தமிழக அரசு RTI இல் பதில்




தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வுபெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், வழங்குவது தொடர்பாக தமிழக அரசிடம் அரசாணை இன்னும் வெளியிடப் படவில்லயென நிதித் துறை பதில் வழங்கி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு
பழைய ஓய்வூதிய திட்டத்தில், (GPF/TPF) தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
1. மாதாந்திர (அகவை முதிர்வு) ஓய்வூதியம்,
2. பணிபுரியும் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மரணமடைந்தால், அந்த ஊழியர்களின் கணவன் (அ) மனைவிக்கு மாதந்தோறும் குடும்ப ‌ஓய்வூதியம்,
3. விருப்ப ஓய்வூதியம்,
4.இயலாமை ஓய்வூதியம்,
5.ஈடுகட்டும் (அ) இழப்பீட்டு ஓய்வூதியம்,
6. கட்டாய ஓய்வூதியம்,
7. இரக்க ஓய்வூதியம்
என்னும் ஓய்வு பெறும் தன்மைக்கு ஏற்ப 7 வகையான
ஓய்வூதியம் நடைமுறையில் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தை சேர்ந்த திரு.ஜெயப்பிரகாஷ் என்பவர் CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு அலுவலகங்களில்
பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மாதந்தோறும் வழங்க வேண்டுமென,
தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை எண் (ம) நாளை குறிப்பிடவும்,
மேலும் இந்த அரசாணையின் நகலை வழங்கவும். என்று தமிழக அரசின் நிதித்
துறைக்கு 20.11.2018 நாளிட்ட மனுவில் வரிசை எண் 1 முதல் 6 வரையான
தகவல்களை கோரி RTI 2005இன் கீழ் கடிதம் அனுப்பினார். நிதித் துறையின்
கடித எண்.61444/நிதி (PGC-1)/2018 நாள்:14.12.2018 என்ற கடிதத்தில்
மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை.  என பதில் வழங்கப்பட்டுள்ளது.
CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு
அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ‌ஓய்வூதியம்,
விருப்ப ஓய்வூதியம், இயலாமை ஓய்வூதியம் ஈடுகட்டும்(அ)இழப்பீட்டு
ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம் மற்றும் இரக்க ஓய்வூதியம் என்னும் 7
வகையான ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு இன்னும் அரசாணை வெளியிடவில்லை.
அரசாணை இல்லையென்பதை விட, இன்னும் அரசால் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை
என்பதே உண்மை.

இவண்
அ.சி.ஜெயப்பிரகாஷ்
இ.நி.உ.ஆ
அரூர் ஒன்றியம்
தருமபுரி மாவட்டம்.

 உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்

Comments

Popular posts from this blog

SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT 2026-2027 (GIRLS 17 ATHLETIC ENTRY FORM VERIFY BEFORE FILLING)

புதிதாக ‘உடற்கல்வி பிரிவு’

பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு துறை நடத்தும் விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவர்கள் எந்த விளையாட்டுகள் இணைந்து விளையாடலாம்*