6வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களையப்பட அமைக்கப்பட்ட ஒரு நபர்குழு இடைநிலை சம ஊதிய உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊதியம் மறுக்கப்பட்டதற்கு கூறிய காரணம்
6வது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களையப்பட அமைக்கப்பட்ட திரு.ராஜீவ்ரஞ்சன் ஒரு நபர்குழு தனது அறிக்கையில் இடைநிலை /சம ஊதிய உடற்கல்வி ஆசிரியர் ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கிணையான ஊதியம் மறுக்கப்பட்டதற்கு கூறிய காரணம்...
1.எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள்...
(அதற்காக, அவர்கள் செய்யும் வேலைக்கும், தகுதிக்கும், திறமைக்குந்தான் ஊதியமே தவிர எண்ணிக்கைக்கு அல்ல.)
2.கல்வித்தகுதி 10 ம் வகுப்புடன் கூடிய ஆசிரியர் பயிற்சி... 12 ம் வகுப்பு படிக்கவில்லை அதனால் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்குறிய ஊதியம் 5200-2800 போதும்...
(கலந்தாய்வில் எங்களது PLUS TWO CERTIFICATE ஆ VERIFY பண்ணித்தானே பணியில் சேர்த்தீர்கள்.)
மேலும் இடைநிலை ஆசிரியர்கள் கிராமப்புறத்தில் வேலை செய்கிறார்கள் அங்கு விலைவாசி குறைவு அதனால் அவர்களுக்கு அந்த ஊதியம் போதும்...
அட அட அட என்னாவொரு விளக்கம்..... அற்புதம்.
கிராமப்புறக் கடையில் கூட இடைநிலை ஆசிரியரா என்று கேட்டுத்தான் அவர்களுக்கு மட்டும் விலை குறைவாக கொடுப்பார்கள் போல.....
இடைநிலை ஆசிரியர்கள் 12 ம் வகுப்பு படிக்கவில்லை அதனால் 5200-2800 இந்த ஊதியம் போதும் என்று சொல்லியிருக்கிறது அறிக்கை...
அதற்கு ஆசிரியர் சங்கங்கள் என்ன பண்ணியிருக்கனும்...
தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசும் அளவிற்கு சர்வ வல்லமை படைத்திருப்பவர்களும்,
இயக்குநர் அலுவலகத்தில் நமக்கு மட்டும் தனி மரியாதை என்று கூறிக் கொள்பவர்களும்
(அரசுக்கு உண்மை நிலையினை எடுத்துக்கூறி கோரிக்கையை வென்று கொடுத்திருப்பது என்ன அவ்வளவு கஷ்டமான வேலையா என்ன)
திரு.ராஜீவ்ரஞ்சனை நேரில் சந்தித்து நீங்கள் அறிக்கையில் கூறியிருப்பது மிகவும் தவறு இடைநிலை ஆசிரியர்களின் கல்வித்தகுதி 10 Th,12Th டன் கூடிய Diploma in Teacher Education, So அவர்களுக்கு 9300-4200 மத்திய அரசுக்கிணையான ஊதியம் மறுக்கப்பட்டிருக்கிறது .
அவர்களுக்கு சரியான ஊதியத்தை வழங்கிடுங்கள் என்று அமைச்சர் மற்றும் முதல்வரை சந்தித்துக் கூறி அல்லது வலுவான போராட்டத்தினை முன்னெடுத்து கோரிக்கையை நிறைவேற்றி தந்திருந்தால் நாங்கள் எதுக்கு இப்படி தன்னந்தனியாக (எண்ணிக்கையில் 100000 பேர் இருந்தும்) 9300-4200 கூட கேட்காமல் 8370 கொடுத்தால் கூட போதும் என்று 6 நாட்களாக போராடப் போகிறோம்...
இறுதியாக ஒன்று
இடைநிலை ஆசிரியர்களை கடந்த 6 நாட்களாக கடும் பனிப்பொழிவில், கொசுக்கடியில், நடுவீதியில் உறங்கவிட காரணமாக இருந்த அனைவருக்கும் சரியான நேரத்தில் பதில் சொல்வோம்.....
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இனி ஜனவரி 7 ம் தேதி நடக்கப் போவதையாவது அலசி ஆராய்ந்து என்ன நடக்கப் போகிறது, யாருக்கு பலன் கிடைக்கப் போகிறது , இடைநிலை ஆசிரியர்களுக்கு என்ன கிடைக்கிறது என்று நடப்பதை உற்றுநோக்கி விழித்துக் கொள்ளுங்கள்
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்