*💢🔴🔴🔴💢அஞ்சல் வாக்கு செலுத்தும் விதம் - விளக்கம்*

*♦♦முதலில் உறுதி மொழி படிவத்தில் (declaration Form) 13A ல் முன்,பின் என  இரண்டு பக்கங்கள் இருக்கும்.*

*♦♦முன்புறம் மட்டும் மேல்பகுதியில் வாக்கு சீட்டு எண்ணை (Ballot paper no) எழுதி கையெழுத்திட வேண்டும்*

*♦♦கீழ்பகுதியில் உறுதிமொழி படிவத்தில் மேலொப்பம் இட   (attestation) ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் இரண்டு தாசில்தார்கள் சீலுடன் ரெடியாக இருப்பார்கள்.*

*♦♦இரண்டாவதாக வாக்கு சீட்டு உள்ள கவர் படிவம் - 13 B வாக்குசீட்டு (Ballot Paper) மடித்து வைக்கப்பட்டு இருக்கும்.*

*♦♦அதன் கவர்மீது (Postal Ballot Paper cover 13 - B) வாக்கு சீட்டு எண் குறிப்பிட வேண்டும்*.

*♦♦நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை கவர்மீது வாக்கு சீட்டு எண்ணை அவர்களே குறிப்பிட்டு உள்ளார்கள்.*

*🔵🔵🔵மிக மிக கவனம்.*

*🔶🔶வாக்கு சீட்டில் பந்துமுனைப் பேனாவால் நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு நேரில் அந்த கட்டத்திற்குள் மட்டும் இருக்கும்படி ஒரே ஒரு டிக் √அடிக்கவும்.*

*🔶🔶மை பேனாவால் டிக் அடித்து பின்பு மடிக்கும் போது ஒருவேளை மற்றோரு சின்னத்திலோ அல்லது மற்றொரு வேட்பாளருக்கு எதிராகவோ மை கசிந்து விட்டால் அது செல்லாத ஓட்டாகிவிடும்.*

*🔶🔶எனவே டிக் √ குறியீட்டை மிக கவனமாக அடியுங்கள்.Over writing வேண்டாம்.*

*🔶🔶சின்னத்தில் ஒரு டிக்,வேட்பாளர் பெயரில் ஒரு டிக் என இரண்டு டிக் அடித்து விடாதீர்கள்.*  

*🔶🔶பின்பு வாக்குசீட்டை தேர்தல் அலுவலர் எவ்வாறு மடித்து வைத்துள்ளாரோ அவ்வாறே மடித்து உள்ளே வைத்து கவரை ஒட்டி விடவும்*.

*🔶🔶அடுத்து படிவம் -  13 C.இது ஒரு கவர்.*
*இதில் படிவம் 13A (உறுதிமொழி படிவம்) மற்றும் 13 -B* *வாக்குசீட்டை வைத்து ஒட்டப்பட்ட கவர் இரண்டையும்  (Ballot paper உள்ளகவர்)  இந்த 13 -C கவரினுள் வைத்து ஒட்ட வேண்டும்.*

*🔶🔶இந்த கவரின் மீது இடது பக்க ஓரத்தில் signature of the sender என இருக்கும். இதன் மீதும் கண்டிப்பாக கையெழுத்து இடவேண்டும்.*

*🔶🔶இல்லை என்றால் நமது ஓட்டு கவரினை பிரித்து பார்க்காமல் அப்படியே தூர வைத்து விடுவார்கள்.*
*நமது வாக்கு செல்லாத வாக்காகிவிடும்.*

*🔶🔶நிறைவாக படிவம் 13 -D.இது வாக்காளருக்கான வாக்களிக்க உதவும் வழிகாட்டி குறிப்பு*. *(Information letter)*

*🔶🔶இந்த படிவத்தின் இறுதியில் இரண்டு கோடுகள் இருக்கும்.*
*அதில் 08 am on 23.05.2019 என எழுத வேண்டும்*.

*🔶🔶நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை படிவம் 13 D யில் அவர்களே பூர்த்தி செய்து உள்ளனர்.*

*🔷🔷குறிப்பு: ஒரு தேர்தல் பயிற்சி வகுப்பில் இரண்டு தாசில்தார்கள் Attest பண்ண சீலுடன் இருப்பார்கள்.*

*🔷🔷நாம் வரிசையில் நின்று பொறுமையாக வாக்களிக்க வேண்டும்.*

➖➖➖➖➖➖➖➖➖➖

  *🌈⚡மின்னல் செய்தி🌈⚡*
            

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES