கிரிக்கெடில் புதிய டெக்னால்ஜி புரட்சி!! இனி யாரும் தப்ப முடியாது!!
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் வருகிறது ஸ்மார்ட் சிப் பந்து!! கிரிக்கெட் விளையாட்டில் ஏற்கெனவே பல்வேறு தொழில்நுட்பங்கள் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில் அடுத்தக்கட்டமாக சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் அறிமுகமாக உள்ளன. இந்த சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனமான கூக்கபுரா நிறுவனம் இந்த சிப் பொருத்தப்பட்ட பந்துகளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அது என்ன ஸ்மார்ட் பந்தில் உள்ள டெக்னால்ஜி: கிரிக்கெட் பந்துகளில் மிகவும் சிறிய அளவிலான கீழே விழுந்துவிடாத அளவில், அதிர்வுகளைத் தாங்கக்கூடிய சிப்புகள் பந்தில் பொருத்தப்படும். இந்தப் பந்து வீசப்படும் போது பந்தின் வேகம், பந்துவீச்சாளர் கையை விட்டு பந்து ரிலீஸாகும் போது அதன் வேகம், தரையில் பட்டு பவுன் ஆகும்போது அதன் வேகம், பவுன்ஸருக்குப் பின் பேட்ஸ்மேனைக் நோக்...